|
1959-1959 |
மர்ஹூம் ரி.ஏ.ஹமீட் |
|
60 மாணவர்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் பாடசாலையின் தற்காலிக அதிபராக இவர் பொறுப்பேற்று பாடசாலையை நிலை நிறுத்துவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளை திறம்பட மேற்கொண்டு இருந்தார். இவர் இடமாற்றம் பெற்றுச்செல்ல இப்ப பாடசாலையின் இரண்டாவது அதிபராக மர்ஹூம் எம்.ஆதம்பாவா அவர்கள் பொறுப்பேற்றார்கள். |
|
1960-1962,1965-1970 |
மர்ஹூம் எம்.ஆதம்பாவா |
|
முதலாவது நிரந்தர அதிபரான இவர் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். தரம் மூன்று வரை வகுப்புகள் நடாத்தப்பட்டன . இரண்டாவது சேவை காலத்தில் சுற்றுவெளி அமைக்கப்பட்டது .இவரைத் தொடர்ந்து மூன்றாவது அதிபராக |
|
1963-1964 |
மர்ஹூம் யூ.எல்.இஸ்மாயில் மரைக்கார் |
|
இஸ்மாயில் அவர்கள் பொறுப்பேற்றார். இப்படசாலையின் பௌதிக வள, கல்வி அபிவிருத்திக்காக சுமார் ஒரு வருடம் அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட இவர் 1964ஆம் ஆண்டு நான்காம் மாதம் 30 ஆம் தேதி இடமாற்றம் பெற்றுச் சென்றார் .இதனைத் தொடர்ந்து நான்காவது அதிபராக |
|
1964-1965,1970-1989 |
அல்ஹாஐ் எஸ்.எச்.எல்.கபூர் |
|
பதவியேற்றார். இப்பாடசாலையின் பிதாவாக பலராலும் நன்றியுடன் நினைவு கூறப்படும் இவரது சேவை காலத்தில் பாடசாலை பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது .ஆயினும் 1970 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சர் திரு ஐ எம் ஆர் எம் ஏ ஈரிய கொல்ல அவர்கள் திட்டப்படி ஏழாம் தர வகுப்பிலிருந்து தொடர முடியாத நிலை ஏற்பட்டது.40’ 20’அளவுடைய நிரந்தர கட்டிடத்துடன் இணைத்து இரண்டு வகுப்புகளை பெற்றார். ஆசிரியர் சங்கத்தின் முயற்சியில் இவை அமைக்கப்பட்டன. 06 தொண்டர் ஆசிரியர்களுக்கு அம்பாறை வலயக் கல்வி காரியாலத்தின் மூலம் நியமனக் கடிதம் பெற்றுக் கொடுக்கப்பட்டது . நிந்தவூரை சேர்ந்த சேர்.ராசிக் எனும் பெற்றாரின் மூலமாக குடிநீருக்கான கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது .இப் பாடசாலையின் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிய முஸ்தபா அவர்களின் முயற்சியின் பேரில் மூன்று நிரந்தர கட்டிடங்களுக்கு மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன் பாடசாலை சுற்று மதில் அமைக்கப்பட்டது. மேலும் 40’ 20’ அளவுடைய கட்டிடம் புனர் நிர்மானம் செய்யப்பட்டது. கல்முனை பிரதமக் கல்வி காரியத்துவ செயற்பாட்டின் அடிப்படையில் இப்பிரதேசத்தின் முதல் தரப் பாடசாலையாக போற்றப்பட்டு சம்பவத் திரட்டு புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டது .1981 ஆம் ஆண்டில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதன்முதலாக செல்வி ஹுஸ்னா என மாணவர் சித்தி பெற்றார் .அதிபரின் இடைவிடாத முயற்சியினால் 1986இல் 15 மாணவர்கள் இப் பரிச்சையில் சித்தி அடைந்தனர். அது அந்நாளில் ஒரு சாதனையாக போற்றப்பட்டது. இதனால் அதிகமான மாணவர்கள் இப்பாடசாலையில் இருந்தனர் .பாடசாலையின் பெயர் அல்மதீனா வித்தியாலயம் என மாற்றப்பட்டது .19 வருடங்கள் அதிபராக அரும் சேவை ஆற்றிய இவர் இல் ஓய்வு பெற்று சென்றார் இவரைத் தொடர்ந்து |
|
1989-2001 |
மர்ஹூம் எம்.எஸ்.மீராசாஹிபு |
|
அவர்கள் ஐந்தாவது அதிபராக பதவியேற்றார் .அதிபர் கபூர் அவர்களினால் வளர்க்கப்பட்ட இப்ப பாடசாலையின் கல்வித் தரத்தினை இவர் மென்மேலும் முன்னேற்ற பாடுபட்டார். 1995இல் ஒன்பதாம் தரத்தினை ஆரம்பித்ததோடு 1997 கா.பொ.த சாதாரண தரம் வரை கற்பிக்கும் பாடசாலையாக இதனை தரம் உயர்த்தினார். இக்காலத்தில் மாணவர்கள் பரிட்சைகளில் அதிசிறந்த பெரும் பெயர்களை பெற்றனர் இவர் ஓய் பெற்றுச் சென்று நிலையில் ஆறாவது அதிபராக |
|
2001-2001 |
ஜனாப் எஸ்.அப்துல் சலாம் |
|
அவர்கள் கடமையாற்றினார். தனது குறுகிய சேவைக்காலத்தில் கல்வி செயற்பாடுகளில் மிகுந்த அக்கறையுடன் செய்யப்பட்டார். இவர் இடமாற்றம் பெற்றுச் செல்ல ஏழாவது அதிபராக |
|
2001-2004 |
மர்ஹூம் அப்துல் ஜப்பார் |
|
அவர்கள் பொறுப்பேற்று இப் பாடசாலையின் கல்வித்தரத்தை மேலும் முன்னேற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார் .மென்மையான தன்மையும் நிதானமான போக்கும் கொண்ட இவரது காலத்தில் பாடசாலை நிர்வாகம் சிறப்பாக இருந்தது என பலராலும் பாராட்டி பேசப்பட்டது .மாணவர்கள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றனர். இவர் வபாத்தானதை தொடர்ந்து |
|
2004-2007 |
ஜனாப் எம்.ரி.ஆதம் அலி |
|
அவர்கள் எட்டாவது அதிபராக கடமையேற்றார். இவரது காலத்தில் கல்வி பொது தராத உயர்தர பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது .தரம் 1c பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டதோடு மகாவித்தியாலயமாகவும் மாறியது. இவரைத் தொடர்ந்து உதவி அதிபராக கடமையாற்றிய ஜனாப் இஸ்மாயில் லெப்பை(2007.09.15-2008.01.31) அவர்கள் தற்காலிக அதிபராக பணியாற்றினார். தொடர்ந்து ஒன்பதாவது அதிபராக |
|
2008-2016 |
அல்ஹாஜ் எஸ்.அஹமது |
|
அவர்கள் பதவியேற்றார் .இவர் குரு பிரதீபா பிரபா என்ற ஜனாதிபதி விருதினை எமது ஊரில் முதல் முதலாக பெற்றவராவார். மேலும் இஸ்ரேல் நாட்டுக்கு முகாமைத்துவ பயிற்சிக்கு சென்று வந்த அதிபரின் சேவை காலத்தில் பாடசாலை பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வந்தது. 2008இல் மூன்று மாடி வகுப்பறை கட்டிட தொகுதி ஒன்று கிடைக்கப்பெற்றது அதே வருடம் சாதாரண பரிட்சையில் ஏழு பாடங்களில் 100% சித்தியினை மாணவர்கள் பெற்றனர் .பரீட்சைக்குத் தோன்றிய 75 மாணவர்களில் 64 பேர் உயர்தரம் கற்பதற்கு தகைமை பெற்றதால் கல்முனை மாவட்டத்தில் இரண்டாவது சிறந்த பெருவெற்றியினை பெற்ற பாடசாலையாக சமூகமும் மதினா மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டது. |
|
2016-2019 |
ஜனாப் எம்.எச். சரிபுத்தீன் |
|
12 வருடங்களாக எங்கள் பள்ளியை நடத்தி வரும் இவர் நிர்வாக அதிகாரியாக உள்ளார். பள்ளியின் முதல் விளையாட்டுக் கண்காட்சியை அறிமுகப்படுத்தி, அந்தக் காலகட்டத்தில் பள்ளி விளையாட்டுத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுத்தார். |
|
2020-2023 11) |
ஜனாப்.எம்.எல்.எம்.நிஹாருதின் |
|
நிகார்தீன் ஆசிரியர் அவர்கள் க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வினை எமது பாடசாலைக்கு அறிமுகம் செய்துள்ளார். பழைய மாணர்கள் சங்கத்தினை 2019ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்துள்ளார். 3 மில்லியன் பணத்தினை எமது பாடசாலைக்காக பெற்றுக்கொண்டு பாடசாலையை சீர் செய்தார். பாடசாலை மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டிற்காக அரும்பணியாற்றினார் |







