2023 உயர் தரப் பரீட்சையில் நிந்தவூர் அல் - மதீனா மகா வித்தியாலயத்தில் இருந்து வர்த்தகப் பிரிவில் 07 மாணவர்களும், கலைப் பிரிவில் 07 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இவர்களில் வர்த்தகப் பிரிவில் எஸ்.முஹம்மட் அஷ்பாக் எனும் மாணவன் 3A பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை (District rank 01) அடைந்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் முகாமைத்துவ குழுவினர், ஆளணியினர் தமது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை பரீட்சைக்கு ஏனைய மாணவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகள் உள்ளன. அதனால் உறுதியான மனத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வாழ்க்கையில் தோல்வி என்பது கிடையாது. வெற்றிகளால் நிறைந்ததுதான் வாழ்க்கை. வெற்றியை தேடுவதே நமது பணி.
இதே வேளையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனை பாடசாலையின் அதிபர் தலைமையிலான குழுவினர் வீடு சென்று வாழ்த்தி, மாலை அணிவித்து, பரிசு வழங்கி கௌரவித்தனர்.
எம்.சஹாப்தீன் -
02.06.2024







