கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கபடிப் போட்டியில்
சம்பியனாக வெற்றி ஈட்டிய நிந்தவூர் , கமு/ கமு/ அல் மதீனா வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும், முதலாம் தவணைப் பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வும் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் அவர்களும் , விஷேட அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ,சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களும் , சிறப்பு அதிதியாக நிந்தவூர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் MLM. முத்தஸ்ஸிர் அவர்களும் மற்றும் பிரதி அதிபர் ABM. Rumais உதவி அதிபர்கள் MHM. Harees, Mrs.S.Ismail, ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , SDEC அங்கத்தவர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை அதிபர் ஜனாப். MHMA. Rafihu அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை வேலைத்திட்டத்திற்கான காசோலையும் அதிபரிடத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
தகவல்
பாடசாலை ஊடகப் பிரிவு







